↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தை பிடித்ததுடன் நின்றுவிடாமல் மேலும் பல சாதனைகள் செய்ய விரும்புகிறார் சானியா மிர்ஸா. சானியா மிர்ஸா சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மார்டினா ஹிங்கிஸ் ஜோடி டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தனது கனவு நினைவாகிவிட்டதாக தெரிவித்துள்ள சானியா ஓய்வு பெறும் முன்பு மேலும் பல சாதனைகள் புரிய விரும்புகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
எனக்கு டென்னிஸ் விளையாடுவது மிகவும் பிடிக்கும். எனக்கு பயிற்சி செய்வதும், கடின உழைப்பும் பிடிக்கும். நான் விரும்பும்வரை விளையாட விரும்புகிறேன்.
நான் மேலும் பல சாதனைகள் புரிய விரும்புகிறேன். சாதனைகளுக்கு எல்லையே இல்லை. நான் ஓய்வு பெறும் முன்பு பலவற்றை சாதிக்க விரும்புகிறேன். சில பெரிய போட்டிகள் வர உள்ளன.
2010ம் ஆண்டு திருமணம் செய்ய தீர்மானித்தது, இரட்டையர் பிரிவில் கவனம் செலுத்துவது என முடிவு செய்தது தான் நான் என் கெரியரில் எடுத்த இரண்டு முக்கிய முடிவுகள் ஆகும்.
2010ம் ஆண்டு என் கெரியர் முடிந்துவிட்டது என நினைத்தேன். என் மணிக்கட்டு நிலைமை மோசமாக இருந்தது. என்னால் தலைமுடியை கூட வார முடியவில்லை. அதனால் டென்னிஸ் விளையாடுவது என்பது முடியாததாக இருந்தது. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டேன்.
ஒரு நாள் நானும், என் கணவர் சோயப் மாலிக்கும் பேசிக் கொண்டிருக்கையில், நீ ஏன் மீண்டும் விளையாடக் கூடாது என்றார். அதன் பிறகு நான் விம்பிள்டன் போட்டியில் விளையாடி 2 சுற்றில் வெற்றி பெற்றேன். அது நான் எடுத்த நல்ல முடிவுகளில் ஒன்று ஆகும்.
அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு இரட்டையர் பிரிவில் கவனம் செலுத்தியது நான் எடுத்த இரண்டாவது பெரிய முடிவு ஆகும். ஒற்றையர் பிரிவில் மட்டும் விளையாடினால் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக முடியாது என நினைத்தேன். பேட்மிண்டனில் முதலிடத்தைப் பிடித்துள்ள சாய்னாவுக்கு என் வாழ்த்துக்கள் என்றார் சானியா.
Home
»
sania
»
sports
»
sports.tamil
» என் வாழ்வில் நான் எடுத்த 'அந்த 2' முக்கிய முடிவுகள்: சானியா மிர்ஸா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment