எதிர்காலம் சம்பந்தப்பட்ட எல்லா முடிவு களையும் நான்தான் எடுக்க வேண்டும் என்று உற்சாகப் படுத்தியவர் அப்பா கமல்.
என் எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் அவர் எப்போதுமே முட்டுக்கட்டை போட்டதில்லை. இப்போது நானும், அவரும் அவரவர் படங்களில் பிசியாக இருப்பதால், அவருடன் மனம்விட்டுப் பேசுவதற்கான சந்தர்ப்பம் குறைந்துவிட்டது. எனினும், செல்போனில் நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்கிறோம்’ என்றார். தமிழில் விஜய்யுடன் ‘புலி’, அஜீத்துடன் பெயரிடப்படாத படங்களை வைத்திருக்கிறார்.
திரிஷாவுக்கு சினிமாவை விட்டுவிட மனசு வரவில்லை. அதனால், தன் திருமணத்தை அடுத்த வருடம் ஒத்திவைத்துள்ளார். இதற்கு அவரது காதல் கணவர் வருண் மணியன் கிரீன் சிக்னல் காட்டிவிட்டாராம்.
இந்நிலையில், வில்லியாக நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை இன்னும் நிறைவேறவில்லை. அதுமட்டுமல்ல, ரஜினியுடன் ஜோடி சேர வேண்டும் என்ற கனவும் பலிக்கவில்லை. எனவே, அடுத்து ரஜினி நடிக்கும் படம் எது என்று மோப்பம் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திரிஷா, ஜோடியாக இல்லை என்றாலும், ஒரு பாடலுக்காவது ஆடிவிட வேண்டும் என்று சாதுர்யமாக காய் நகர்த்தி வருகிறார்.
0 comments:
Post a Comment