பிரபல பாலிவுட் கவர்ச்சி நாயகி சன்னிலியோன் படங்கள் அனைத்தும் ஏ' சர்டிபிகேட் படங்கள்தான் என அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் சமீபத்தில் நடித்து முடித்துள்ள 'லீலா' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கவர்ச்சிக்காட்சிகள் 'அதுக்கும் மேலே' இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், இந்த படத்தில் சன்னிலியோனின் கவர்ச்சிக்காட்சிகள் எல்லை மீறியுள்ளதாகவும், 'ஏ' சர்டிபிகேட் தரும் படங்களை விட அதிக கவர்ச்சியாகவும் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதனால் பல சர்ச்சைக்குரிய காட்சிகளில் கத்தரி வைக்க வேண்டும் என சென்சார் அதிகாரிகள் கூறியதாகவும், ஆனால் அதற்கு படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த காட்சிக்குரிய முக்கியத்துவத்தை சென்சார் அதிகாரிகளிடம் விளக்கி கூறியதாகவும் செய்திகள் கூறுகின்றன.
'ஏ'சர்டிபிகேட் எல்லையையும் மீரி அதிக கவர்ச்சியாக இருக்கும் படம் 'லீலா' என செய்திகள் வெளிவந்துவிட்டதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment