ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'டார்லிங்' படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி நல்ல வசூலை கொடுத்த நிலையில் அவருடைய அடுத்தபடமான 'பென்சில்' படத்தின் ரிலீஸ் மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 19ஆம் தேதி வியாழக்கிழமை பென்சில் படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் அதே நாளில் இந்த படத்தின் டீசரும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 'டார்லிங்' முதல் படமாக இருந்தாலும், பென்சில் திரைப்படம்தான் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிர்காஷ், ஸ்ரீதிவ்யா, வி.டி.வி கணேஷ், ஊர்வசி, டி.பி.கஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்த படத்தை மணி நாகராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.
0 comments:
Post a Comment