.jpg)
சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் வெளியாகவுள்ள 'ரஜினி முருகன்' படத்தின் உரிமையை திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமியிடம் இருந்து ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளது என்பது நேற்று வெளியான செய்தி. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்த படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை ஈராஸ் நிறுவனத்திடம் இருந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன், பொன்ராம், இமான் ஆகியோர் கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வெற்றி காரணமாக அதே கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் நம்பிக்கையுடன் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரக்கனி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்துள்ள இந்த படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த காக்கி சட்டை' திரைப்படம் வரும் 27ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
0 comments:
Post a Comment