ஈரோடு கிருஷ்ணம் பாளையத்தில் உள்ள சித்தன் நகர் 3–வது வீதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் விஜய் (20) இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வம் என்பவரது மகள் கவுசல்யா (18) சம்பவத்தன்று விஜய்யின் வீட்டின் முன்பு திடீர் என்று உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கூறுகையில், தானும் விஜயும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இதை தொடர்ந்து கடந்த 5ம் திகதி திண்டுக்கல் அருகே கோவிலில் தங்களுக்கு திருமணம் நடந்ததாகவும் கூறினார். மேலும், நாங்கள் திருமணம் செய்து கொண்டதை கேள்விப்பட்டதும் விஜய்யின் பெற்றோர் என்னைமிரட்டி தாலியை பறித்து கொண்டதாகவும் இதன்பிறகு விஜய்யை தன்னிடம் இருந்து பிரித்து சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். பிறகு பொலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கவுசல்யா தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கவுசல்யா தனது காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டார். இதையொட்டி அவரையும், அவருக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட 21 பேரையும் பொலிசார் கைது செய்தனர். இதுதொடர்பாக நேற்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது. விஜய் இதுபர்றி கூறுகையில், நான் கவுசல்யாவை காதலிக்கவும் இல்லை. திருமணம் செய்து கொள்ளவும் இல்லை என்று கூறினார். இதை தொடர்ந்து கவுசல்யாவுக்கு இன்னும் திருமண வயது எட்டவில்லை. எனவே கவுசல்யா கூறுவது போல அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கவுசல்யாவிடம் பொலிசார் தொடர்ந்து அறிவுரை நடத்தினர். இதன்பிறகு திருமண வயது எட்டும் வரை நான் விஜய்க்காக காத்திருப்பேன் என்று பொலிசாரிடம் எழுதி கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். |
18 வயது இளம்பெண்ணின் காதல் போராட்டம்: அறிவுரை கூறிய பொலிசார்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.