சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மெகாஹிட் திரைப்படங்களில் ஒன்று 'சந்திரமுகி. இந்த படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் 'வேட்டையன்' என்ற கேரக்டர் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுசீந்திரன் தான் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு 'வேட்டையன்' என்ற பெயரை வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பாண்டி நாடு பட கூட்டணியான விஷால், சுசீந்திரன், இமான் ஆகியோர் மீண்டும் இணையவுள்ளதாக நேற்று பார்த்தோம். இந்த படத்திற்குத்தான் 'வேட்டையன்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் விஷால் மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஷால் ஏற்கனவே சத்யம், வெடி, மற்றும் ஆம்பள படங்களில் காக்கி சட்டை போட்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை வேல்ராஜ் கவனிக்கின்றார். இவர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி மற்றும் வேந்தர் மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.
0 comments:
Post a Comment