இந்நிலையில் பாஹுபலி, ருத்ரம்மா தேவி பட வரிசையில் பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கும் மற்றொரு சரித்திரப்படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. சில வருடங்களுக்கு முன் மறைந்த சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறுதான் பாபா சத்ய சாய் என்ற பெயரில் திரைப்படமாக இருக்கிறது. தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான கோடி ராமாகிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சாய் பாபா கேரக்டரில் நடிக்க ஏராளமான நடிகர்களை பரிசீலித்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா கடைசியில் முன்னணி மலையாள ஹீரோவான திலீபை தேர்வு செய்துள்ளார்.
சத்யசாய் பாபாவின் 22 வயது முதல் அவர் மறைவது வரையிலான வாழ்க்கையை மட்டும் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் நடந்த சில முக்கிய சம்பவங்களை கொண்டு பாபா சத்ய சாய் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். சத்ய சாய்பாபாவின் பக்தையாக முக்கிய வேடம் ஒன்றில்தான் அனுஷ்கா நடிக்க இருக்கிறார். அண்மையில் அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் கோடி ராமகிரஷ்ணா. கதையைக் கேட்டுவிட்டு, அனுஷ்காவும் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
பாபா சத்ய சாய் படம் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது. அதன் பிறகு ஆங்கிலம், ஹிந்தி என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகம் முழுக்க இப்படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் ஐதராபாத்தில் துவங்கவிருக்கிறது.
0 comments:
Post a Comment