நடிகருடன் காதலா? பார்வதி மழுப்பல்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

அஜீத்தின் ‘என்னை அறிந்தால்' படத்தில் நடித்திருப்பவர் பார்வதி நாயர். அடுத்து கமலின் ‘உத்தம வில்லன்Õ படத்திலும் நடித்து வருகிறார். இவருக்கும் கன்னட பட ஹீரோவும், ராகவேந்திர ராஜ்குமாரின் மகனுமான வினய்க்கும் காதல், இருவரும் டேட்டிங் செய்கின்றனர். காபி ஷாப் மற்றும் சில இடங்களில் இருவரையும் ஜோடியாக பார்த்ததாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. இதுபற்றி பார்வதி நாயரிடம் கேட்டபோது, ‘வினய்யும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே நண்பர்கள். இருவரும் வெவ்வேறு கல்லூரியில் படித்தாலும் அவரை எனக்கு நன்கு தெரியும். நடிகரின் மகன், ராஜ்குமார் குடும்பத்தை சேர்ந்தவர் என்றபோதும் அதை வெளிக்காட்டாமல் எளிமையாக பழகுவார். அந்த வகையில் அவரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கிசுகிசுக்கள் வருவது சகஜம். அதை பெரிது படுத்த விரும்பவில்லை. தற்போது கமலுடன் ‘உத்தமவில்லன்' படத்தில் நடித்திருக்கிறேன். கோ ஆர்டினேட்டர் உள்ளிட்ட யாருடைய உதவியும் இல்லாமல் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கமலுடன் நடிப்பதை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை' என்றார்.
0 comments:
Post a Comment