கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 35வது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. |
இந்த போட்டியின் தொடக்க விழா கடந்த சனிக்கிழமை கிரீன் பீல்ட் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் ‘லலிசம்’ என்ற இசைக்குழுவும் பங்கேற்று இசை நிகழ்ச்சியை நடத்தியது. ஆனால், இவர்களின் நிகழ்ச்சி மிகவும் மோசமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. மோகன்லாலின் பிளாக்கிலும் சமூக வலைதளங்களிலும் பலர் தங்கள் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்தனர். கேரள அரசிடமிருந்து நிகழ்ச்சிக்காக வாங்கிய தொகையை திரும்ப கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக வலைதளம் மூலம் எதிர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. இந்த சம்பவங்களால் மனவேதனை அடைந்த மோகன்லால் நிகழ்ச்சிக்காக வாங்கிய 1.63 கோடி ரூபாய்க்கான காசோலையை விளையாட்டு செயலகத்திற்கு அனுப்பி வைத்தார். அவரது காசோலையை ஏற்க மறுத்த முதல்வர் உம்மன் சாண்டி, விளையாட்டுத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனுடன் இன்று மோகன்லாலின் வீட்டிற்கு சென்று காசோலையை திரும்ப கொடுத்துவிட நினைத்தார். ஆனால், மோகன்லாலோ பிடிவாதமாக காசோலையை திரும்ப பெற மறுத்துவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், நடந்த சர்ச்சைகளால் கடும் மன வேதனையடைந்த மோகன்லால் காசோலையை திரும்ப பெற மறுத்து விட்டதாகவும், அரசு இந்த பணத்தை உபயோகித்துக்கொள்வது பற்றி அவருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். |
அடம்பிடித்த மோகன்லால்…விடாமல் துரத்திய முதல்வர்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment