நீண்ட இடைவெளிக்கு பின்னர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த 'இசை' திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவோடு வெற்றி பெற்ற திரைப்படத்தின் ரீமேக் உரிமையை பெறுவதற்காக டோலிவுட் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து எஸ்.ஜே.சூர்யா சிறப்பாக நடித்திருந்தாலும் இந்த படத்தின் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்த சத்யராஜ் தனி ஆளாக நின்று படத்தை தூக்கி நிறுத்திவிட்டதாக விமர்சனங்கள் கூறுகின்றன. பாலிவுட்டிலும், டோலிவுட்டில் சத்யராஜின் கேரக்டரில் நடிக்க முன்னணி நடிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யாவின் குஷி தெலுங்கு மற்றும் இந்தியிலும், நியூ திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.5 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 'இசை' திரைப்படத்தின் முதல் நாள் வசூலே ரூ.1.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத்தின் என்னை அறிந்தால் என்ற மாஸ் படம் வெளியானபோதிலும், இசை இன்னும் ஒருசில தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
0 comments:
Post a Comment