என்னை அறிந்தால் படத்தின் வெளியீட்டிற்கு முன் இந்தப் படத்தின் கதையும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள காக்கி சட்டை படத்தின் கதையும் ஒரே கதைதான் என பரவலாக ஒரு பேச்சு எழுந்தது. படத்தைப் பார்த்த பிறகுதான் இரண்டும் ஒன்றல்ல, வெவ்வேறு என வதந்தியைப் பரப்பியவர்களே வாயை மூடிக் கொண்டார்களாம். படத்தின் கதாநாயகர்கள் இருவரும் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்பதுதான் இரண்டு படத்திற்குமான ஒரே ஒற்றுமை.
என்னை அறிந்தால் படத்திற்கும் கௌதம் மேனன் முன்னர் இயக்கிய படங்களுக்கும்தான் அதிக ஒற்றுமை என பலரும் பேசிக் கொள்கிறார்கள். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு ஆகிய இரண்ட கௌதம் மேனனின் படங்களும் மறக்க முடியாத படங்கள். அந்தப் படங்களின் தாக்கம் என்னை அறிந்தால் படத்தில் அதிகமாகவே இருக்கிறது என்பதுதான் அந்தப் படங்களின் தீவிர ரசிகர்கள் சொல்லும் கருத்தாக இருக்கிறது.
என்னை அறிந்தால் படம் போன்று சீரியசான கதை கொண்ட படமாக இல்லாமல் காக்கி சட்டை கலகலப்பான படமாகத்தான் எடுக்கப்பட்டுள்ளதாம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் திரைக்கு முன்னால் வெற்றி பெற்ற ஜோடிக் கூட்டணியான சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா ஒரு பக்கம் என்றால், மறு பக்கம் எதிர் நீச்சல் படத்தின் திரைக்குப் பின்னால் உருவான வெற்றிக் கூட்டணியான இயக்குனர் துரை.செந்தில்குமார், சிவகார்த்திகேயன் காக்கி சட்டை படத்தில் இணைந்திருப்பதை கோலிவுட்டினர் சென்டிமென்ட்டாகவே பார்க்கிறார்களாம். காக்கி சட்டை சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டை இன்னும் நிரப்புமா என்பது இரண்டு வாரங்களில் தெரிந்துவிடும்...!
0 comments:
Post a Comment