↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பகல் மற்றும் இரவு நேர ஷிப்டுகளில் மாறி மாறி வேலை செய்யும் போது இதய பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த அதிர்ச்சி தகவல் அமெரிக்காவின் ஹார்வார்ட் மெடிக்கல் பள்ளியின், மருந்தியல் துறை பேராசிரியர், ஈவா ஸ்கெர்ன்ஹாமர் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 22 வருடங்களாக 75 ஆயிரம் நர்சுகளின் வாழ்க்கை முறை இதற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் பிறரை காட்டிலும், ஷிப்ட் மாற்றி வேலை பார்க்கும் பெண்களின் இறப்பு விகிதம் 11 சதவீதம் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.
இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நல்ல தூக்கம் அவசியம். ஆனால் ஷிப்ட் மாற்றி வேலை பார்க்கும் போது தூக்கம் கெட்டுவிடும். இது இதயத்தை பாதிக்கும் விடயங்களில் முக்கியமான ஒன்றாகும்.
ஈவாவின் இந்த ஆய்வு கட்டுரை அமெரிக்க மருத்துவ இதழிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஊழியர்கள் கருத்தில் வைக்க வேண்டிய முக்கியமான விடயம் இதுவாகும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top