ஆண்மை பலம் பெருக வேண்டும் என்பதற்காக புலிகளைக் கொன்று தின்றவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சீன நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த வியாபாரி சிபாட். இவர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வனப்பகுதியில் ஆண் புலிகளை வேட்டையாடி அவற்றின் ஆண் உறுப்பு, மற்றும் இறைச்சியைச் சாப்பிட்டு வந்துள்ளார்.
மேலும் புலிகளின் ரத்தத்தை மதுவாகக் குடித்து மகிழ்ந்தார். சிபாட் தனது ஆண்மை சக்தியைப் பெருக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தான் மட்டுமின்றி தனது நண்பர்களுக்கும் அவ்வப்போது விருந்து அளித்து மகிழ்ந்துள்ளார்.
இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் புலியைக் கொன்று இறைச்சியைத் துண்டாக்கும் காட்சிகள் செல்போனில் படமாக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவற்றையும் பறிமுதல் செய்தனர்.
சிபாட் உள்பட 15 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபாட்டுக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், அவருக்கு ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவருக்கு உடந்தையாக இருந்த 14 பேருக்கு 5 மற்றும் ஆறரை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
உலக அளவில் காடுகளில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், இது போன்ற சம்பவம் சீனாவில் நடந்துள்ளது விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment