இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் அப்துல் ரசாக் முன்வைத்துள்ளார்.
இது குறித்து ரசாக் கருத்து வெளியிடுகையில்,
‘வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக எப்போதெல்லாம் இருந்தாரோ, அப்போதெல்லாம் சீனியர் வீரர்களுக்கு எதிரான மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டார். சீனியர் வீரர்களை வெளியே தள்ளும் நிலைக்கு மாற்றி அவர்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க முயற்சி செய்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு பயிற்சியாளராக பொறுப்பேற்றதும் அவர் என்னை குறி வைத்தார். அதன் பின் முகமது யூசுப்பை பழி வாங்கினார். அதன்பிறகு பாகிஸ்தான் அணியில் எந்த வீரரும் சில ஆண்டுகள் சிறப்பாக விளையாடி இடம் பிடித்தது கிடையாது. சோயிக் அக்தர் கூட வக்கார் யூனிசின் முந்தைய பதவிக் காலத்தில் ஓய்வு பெற்றார்.
2011ல் அப்ரிடியை அணியில் இருந்து நீக்குவதற்கும் வக்கார் முக்கிய காரணமாக இருந்தார் என தெரிவித்துள்ளார்.
சகலதுறை ஆட்டக்காரரான அப்துல் ரசாக், 2012-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கிண்ண போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்காக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment