சார்லஸ்டனில் நடந்த lop-sided final ஆட்டத்தில் காஸே டெல்லாகுவா - டாரிஜா ஜூராக் ஜோடியை 6-0, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது சானியா-ஹிங்கிஸ் ஜோடி.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 470 புள்ளிகள் உள்பட மொத்தம் 7965 புள்ளிகளை சேகரித்து முதலிடத்தை பெற்றிருக்கிறார் சானியா மிர்சா.
இந்நிலையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சானியா மிர்சா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜூணா தொகுத்து வழங்கினார்.
அப்போது சானியா மிர்சாவிடம், சோடியம் குளோரைடு எதனுடைய வேதியியல் பெயர் என்று கேட்கப்பட்டது. ஆனால் நான் இயற்பியல், வேதியியல் பாடங்களில் ரொம்ப வீக் என்று சொல்லி, பதில் `தண்ணீர்’ என்று கூறினார்.
இதனையடுத்து முதல் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு கூட இதற்கு உப்பு என்று பதில் தெரியும். சானியா இவ்வளவு அறிவாளியாக இருக்காங்களே என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கிண்டல் அடிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதே போன்று நடிகை ஆலியா பட் இந்தியாவின் ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கு தவறாக பதில் கூறி ரசிகர்களிடம் வாங்கிகட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment