கிரிக்கெட் வரலாற்றில் 5 முறை உலகக்கிண்ணத்தை வென்று ஜாம்பவனாக இருக்கும் அவுஸ்திரேலிய அணி, ஒரு முறை கூட டி20 உலகக்கிண்ணத்தை வென்றதில்லை.
அறிமுக டி20 உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியா அரையிறுதியில் இந்தியாவிடம் தோற்றது. 2010ல் இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றது.
இந்நிலையில் இது தொடர்பாக அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கருத்து தெரிவிக்கையில், இதுவரை 5 முறை டி20 உலகக்கிண்ண போட்டி நடைபெற்றும் அவுஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெறாதது அவமானமே.
ஐபிஎல் போட்டியில் விளையாடுவதன் மூலம் வீரர்களின் திறமை அதிகரிக்கிறது. இனிவரும் காலங்களில் டி20 உலகக்கிண்ணம் வெல்ல அவுஸ்திரேலியா போராடும் என்று தெரிவித்துள்ளார்.
2007ம் ஆண்டு அறிமுகமான டி20 உலகக்கிண்ணத்தை டோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து 2009ல் பாகிஸ்தானும், 2010ல் இங்கிலாந்தும், 2012ல் மேற்கிந்திய தீவுகளும், 2014ல் இலங்கையும் கிண்ணத்தை வென்றன.
0 comments:
Post a Comment