↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
'என்னமோ நடக்குது' படத்தை அடுத்து இயக்குனர் ராஜபாண்டி மற்றும் நடிகர் விஜய் வசந்த் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் 'அச்சமின்றி'. இந்த படத்தில் விஜய் வசந்த் திருநங்கையாக நடிப்பதாக வெளிவந்த செய்தி குறித்து இயக்குனர் ராஜபாண்டி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த படத்திற்கு முதலில் 'சிகண்டி' என்ற மகாபாரதத்தில் வரும் கேரக்டரின் பெயரை டைட்டிலாக வைத்திருந்ததாகவும், சிகண்டி என்ற கதாபாத்திரம் மகாபாரத போரில் பீஷ்மரை பழிவாங்க சரியான நேரத்திற்காக காத்திருந்ததை போல இந்த படத்தின் ஹீரோ தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்ற சரியான நேரத்திற்காக காத்திருப்பதால் அந்த டைட்டிலை முதலில் தேர்வு செய்ததாகவும், ஆனால் ஒருசில ஊடகங்கள் சிகண்டி மகாபாரதத்தில் திருநங்கையாக இருப்பதால் விஜய் வசந்த் திருநங்கையாக நடிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது என்றும், உண்மையில் விஜய் வசந்த் திருநங்கை கேரக்டரில் நடிக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் நம் நாட்டில் உள்ள கல்விமுறை பயனில்லாதது என்பதை விளக்கி இருப்பதாகவும், பின்லாந்து நாட்டின் கல்விமுறையை இங்கும் கொண்டு வந்தால் கல்வியில் எந்த அளவுக்கு நம் நாட்டில் புரட்சி ஏற்படும் என்பதை வித்தியாசமான கோணத்தில் தான் கூறியிருப்பதாகவும் ராஜபாண்டி தெரிவித்தார்.
சமீபத்தில் வெளியான எனக்குள் ஒருவன்' படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்த ஸ்ருஷ்டி டாங்கே, இந்த படத்தில் விஜய் வசந்துக்கு ஜோடியாகவும், எம்.பி.ஏ மாணவியாகவும் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment