சன்னி லியோனின் புதிய படமான ஏக் பெஹ்லி லீலாவில், ஒரே ஒரு அரை நிர்வாண காட்சிக்கு மட்டும் கட் கொடுத்துள்ளது சென்சார் போர்டு. சன்னி லியோன் நடிப்பில் இந்தியில் உருவாகியிருக்கும் படம் ‘ஏக் பெஹ்லி லீலா'வின் ட்ரைலர் மற்றும் புகைப்படங்கள் ஏக பரபரப்பைக் கிளப்பியுள்ளன. சன்னி லியோன் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். பாபி கான் இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் வழங்குவதற்காக சென்சார் போர்டுக்கு படத்தை போட்டுக் காண்பித்துள்ளனர்.
படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இருந்தாலும், படத்தில் ஹோலி பண்டிகையின் போது ஒரு பெண்ணின் மார்பில் வண்ணப் பொடி பூசுவது போன்ற ஒரு காட்சிக்கு மட்டும் கட் கொடுத்துள்ளனர். மற்றபடி, படத்தில் எந்தவொரு காட்சியையும் கட் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. சன்னி லியோனின் படுக்கை அறைக் காட்சிக்குக் கூட கட் இல்லையாம். ஏப்ரல் 10-ந் தேதி இப்படம் வெளிவரவிருக்கிறது.
0 comments:
Post a Comment