கடந்த 2011ம் ஆண்டில் நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் கே .வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம் கோ. இப்படம் மிக பெரிய வெற்றி அடைந்தையோட்டி அதன் இரண்டாம் பாகம் வெளி வர வாய்ப்பு உள்ளது என்று அப்பொழுதே தெரிவித்தார்கள் .
சமீபத்தில் Rsinfotainmentதயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம், விஷ்ணுவரதனிடம் துணை இயக்குனராக பணியாற்றிய சரத் என்பவர் கோ படத்தின் கதை சாயலிலே ஒரு கதை சொன்னாராம். அவருக்கும் பிடித்து போக உடனே ஓகே சொல்லியுள்ளார்.
இந்நிலையில் பாபி சிம்ஹாவின் கால்ஷீட் ஏற்கனவே கையில் வைத்துள்ளதால் ஜீவாவுக்கு பதில் இவரை தேர்வு செய்துள்ளனர் . சிம்ஹ ஜோடியாக டார்லிங் படத்தில் நடித்த நிக்கி கல்ராணி நடிக்க உள்ளார் .
மேலும் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்க விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்.
0 comments:
Post a Comment