↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மத்திய அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள நாடு பெலிஷே (Belize). இந்த நாட்டுக்கு அண்மையில் உள்ள மிகப் பெரிய நீர்மூழ்கிப் புதைகுழி (submarine sinkhole) அல்லது கடலடிக் குகையாகக் கருதப் படும் இடம் அதிசய நீலத் துளை (The Great Blue Hole ) ஆகும்.
டிஸ்கவரி சேனலில் உலகின் மிக ஆச்சரியமான 10 இடங்களில் ஒன்றாகக் கருதப் படும் பெலிஷே இன் இந்த நீலத் துளை சுற்றுலாப் பயணிகளுக்கும் நீர் மூழ்குப் பிரியர்களுக்கும் மிகப் பிரசித்தமான இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வண்டல் பகுப்பாய்வு (Sediment analysis) நிபுணர்கள் சமீபத்தில் தெரிவித்துள்ள கூற்றின் படி முதலாம் ஆயிரமாம் ஆண்டில் (millenium) ஏற்பட்ட மிகப் பெரிய வரட்சியானது இன்றைய விஞ்ஞானிகளை ஆச்சரியப் படுத்திக் கொண்டிருக்கும் மாயன் கலாச்சாரம் அழியக் காரணமாக இருந்ததற்கு இந்த நீலத் துளை ஓர் சான்று எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தகவலை Rice பல்கலைக் கழகத்தில் புவியியல் விஞ்ஞானி அன்ட்ரே ட்ரொக்ஸ்லெர் LiveScience தளத்துக்கு அளித்துள்ளார்.
இதில், யுக்கட்டன் குடாநாட்டில் நிலவிய மாயன் நாகரிகம் கி.பி 800 மற்றும் 1000 இடைப்பட்ட காலத்தில் பூமியில் பல காலம் மழை பெய்யாது கடும் வரட்சி ஏற்பட்டதால் அழிந்திருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். இதற்கான மூலக்கூறு அடிப்படையிலான சான்று பெலிஷே நீலத் துளையில் கிடைத்திருப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
தென்னமெரிக்கக் கண்டத்தில் கௌதமாலா, எல் சல்வடோர், ஹொன்டுரஸ் மற்றும் தென் மெக்ஸிக்கோ போன்ற நாடுகளில் இன்னமும் காணப்படும் மாயன் கலாச்சார மக்கள் நிர்மாணித்த கோட்டைகள், ஆலயங்கள் மற்றும் கல்லறைகளின் சிதைவுகள் என்பன கி.பி இன் 900 ஆம் ஆண்டளவில் அவர்களால் கைவிடப் பட்ட பகுதிகளாகும். ஆனால் சுமார் 5 நூற்றாண்டுகளாக இப்பகுதிகளில் நிலவிய இந்த மாயன் கலாச்சாரம் திடீரென அவர்களால் ஏன் கைவிடப் பட்டது என்பது பல தசாப்தங்களாகவே விஞ்ஞானிகளைக் குழப்பிக் கொண்டிருக்கும் விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top