இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி அணித்தலைவர் டோனி, மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் மூலம் அறிவிக்கப்பட்ட டோனியின் இந்த திடீர் ஓய்வு முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
டோனி ஓய்வு பெற்றதால் இந்திய டெஸ்ட் அணியின் அணித்தலைவராக விராட் கோஹ்லி பொறுப்பேற்றார்.
டோனி பற்றி கோஹ்லி இதுவரை எதுவும் கருத்து தெரிவிக்காத நிலையில், இன்று தனது மவுனத்தை கலைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மெல்போர்ன் டெஸ்ட் போட்டி முடிந்த உடன் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். அவரது இந்த முடிவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அணியில் உள்ள அனைத்து வீரர்களும் டோனியின் ஓய்வால் அதிர்ந்து போனார்கள். ஏனென்றால் அவர் திடீரென இந்த முடிவை எடுத்தார்.
டோனியிடம் இருந்து நான் ஏராளமான பாடம் கற்று இருக்கிறேன். மன அமைதியை கொண்டவர். முக்கியமான நேரங்களில் சிறந்த முடிவை எடுப்பார். அவரது ஆலோசனையை தொடர்ந்து பெறுவேன்.
குறிப்பாக இக்கட்டான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி அவரிடம் இருந்து அறிந்தேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment