இந்த நிலையில், டோனியின் ஓய்வு முடிவு குறித்து டிராவிட் நேற்று கூறியதாவது, டோனி வெறும் வாய்ச்சவடால் பேர்வழி அல்ல. அவரது தலைமையின் கீழ் விளையாடியபோது என்னை மிகவும் கவர்ந்த அம்சம் என்னவென்றால், தன்னால் செய்ய முடியாத எதையும் மற்ற வீரர்களை செய்யுமாறு அவர் வற்புறுத்தியதே இல்லை.
நெருக்கடியான கட்டங்களிலும் பதற்றமில்லாமல் செயல்பட்டு மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அதன் காரணமாகவே அனைவரின் மதிப்பையும் பெற்றவர். அதிகம் பேச மாட்டார். ஆனால், எந்த சவாலையும் கண்டு பின்வாங்கவும் மாட்டார். ராஞ்சி போன்ற சிறிய நகரத்தில் இருந்து இந்திய அணிக்கு தேர்வாகி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதன் மூலமாக அணித்தலைவர் பதவிக்கே தனி மரியாதையை ஏற்படுத்தியவர்.
தற்காப்பாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவர் வெற்றிக்காக வகுத்த வியூகங்கள் சிறப்பானவை. வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் மட்டுமே அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. அதே சமயம், இளம் வீரர்கள் அடங்கிய அணியை வழிநடத்த வேண்டிய நெருக்கடி இருந்ததையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment