இந்நிலையில் சிம்புவின் ரசிகர்கள் சந்தோஷப்படும் செய்தி ஒன்று இன்று வெளியாகியுள்ளது. சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படத்தின் டீசர் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என இயக்குனர் பாண்டிராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் படத்தின் ரிலீஸ் தேதியையும் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். பாண்டிராஜின் இந்த அறிவிப்பு காரணமாக 'இது நம்ம ஆளு' திரைப்படம் சமூக வலைத்தளம் ஒன்றின் டிரெண்டில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment