இந்திய அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று சிட்னி நகரில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஜர்சும், வார்னரும் களமிறங்கினர்.
இருவரும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய படியே இருந்தனர். உமேஷ் யாதவ்வின் ஓவ்வொரு ஓவரிலும் வார்னர்- ரோஜர்ஸ் ஜோடி சராசரியாக 7 ஓட்டங்களை குவித்தது.
ரோஜர்ஸ் 95 ஓட்டங்கள் மற்றும் வார்னர் 101 ஓட்டங்கள் எடுத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
அஸ்வின் வீசிய பந்தை அடிக்க முற்பட்டபோது, பந்து சுழன்று, மட்டையின் விளிம்பில் பட்டு முரளிவிஜய் கைகளில் தஞ்சம் அடைந்தது. எனவே, வார்னர் 101 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரை அடுத்து 204 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணி எடுத்திருந்த போது. முகமது ஷமி வீசிய பந்தை ரோஜர்ஸ் எதிர்கொள்ளும் போது அதனை தவற விட ஸ்டெம்பில் பந்து பட்டு போல்டானார்.
இதனால் ரோஜர்ஸ் 95 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவற விட்டார். இதனையடுத்து வாட்சன், அணித்தலைவர் ஸ்மித் ஜோடி, பொறுமையாக ஆடி, சரிவில் இருந்து அணியை மீட்டது.
முதல் நாள் ஆட்ட நேர இறுதியில், அந்த அணி 348 ஓட்டங்களை குவித்தது 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. வாட்சன் 61 ஓட்டங்களுடனும், ஸ்மித் 82 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
0 comments:
Post a Comment