ஜேர்மன் நாட்டின் கிழக்கே உள்ள டிரஸ்டென்னில் நடைபெற்ற இஸ்லாமிய எதிர்ப்பு பேரணியில் 18,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பெகிடா என்ற அமைப்பில் 100 பேர் வரையில் மட்டுமே இருந்தனர்.
ஆனால் தற்போது நடைபெற்ற கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த அமைப்பு இன ரீதியான வெறுப்பை தூண்டுவதாகவும், சகிப்புத் தன்மையின்மையை பரப்புவதாகவும் இதன் எதிர்ப்பாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
இதற்கிடையே கலோன் நகரில் நடைபெறவிருந்த பேரணிக்கு, உள்ளூரில் எதிர்ப்புகள் எழுந்ததால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment