இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 4 வருடமாக எழுதி வந்த ஸ்கிரிப்ட்டுக்கு சரியான இயக்குனரை தேடி வந்தார். தற்போது அவரை கண்டுபிடித்துவிட்டார். இதுபற்றி ரஹ்மான் கூறியது:புதிய படமொன்றுக்கு ஸ்கிரிப்ட் எழுதத் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிறது. இடைவிடாத பணியால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்கிரிப்ட் பணியில் கவனம் செலுத்தி வந்தேன். தற்போது அது முடிந்துவிட்டது. இதை இயக்குவதற்கு பொருத்தமான இயக்குனரையும் தேடிக்கொண்டிருந்தேன். மும்பையை சேர்ந்த விஸ்வேஷ் பொருத்தமான இயக்குனராக அமைந்தார். அவர்தான் எனது ஸ்கிரிப்டை இயக்க உள்ளார். விரைவில் அதற்கான வேலை தொடங்க உள்ளது.
நான் கல்லூரியில் படிக்க நினைத்தேன். அதற்கு முன் சினிமாவில் இசை அமைக்க வந்துவிட்டேன். இப்போது நானே இசை கல்லூரி நடத்திக்கொண்டிருக்கிறேன். ஈரானிய படத்துக்கு இசை அமைத்த அனுபவம் பற்றி கேட்கிறார்கள். அங்கு தரத்துக்கு உயர்ந்த இடம் தருகிறார்கள். உண்மையிலேயே எனக்கு நடுக்கமாகவே இருந்தது. யாராவது திட்டிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே இருந்தேன். முற்றிலும் மாறுபட்ட படத்துக்கு இசை அமைக்கிறேன். இசைக்கு மொழி கிடையாது. ஆனால் அதை எப்படி தருகிறோம் என்பதில் அதிக பொறுப்பு இருக்கிறது‘ என்றார்.
0 comments:
Post a Comment