↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் சர்ப்ரஸ் கான் சட்டை காலரை பிடித்து உலுக்கியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ராபின் உத்தப்பா மீது புகார் எழுந்துள்ளது. இருப்பினும், போட்டி ரெப்ரி ஜவகல் ஸ்ரீநாத், அதுபோன்ற செய்தியை மறுத்துள்ளார். கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் ஏப்ரல் 11ம்தேதி, சனிக்கிழமை, கொல்கத்தாவில் மோதின. அதில் பெங்களூர் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், போட்டி முடிந்த நிலையில் கொல்கத்தா வீரர் ராபின் உத்தப்பா, பெங்களூரு இளம் வீரரான சர்ப்ராஸ் கான் சட்டை காலரை பிடித்து உலுக்கியதாகவும், டி வில்லியர்ஸ் ஓடிவந்து விலக்கி விட்டதாகவும், டைம்ஸ்நவ் சேனல் செய்தி வெளியிட்டது.
இந்த சம்பவம், சைட் ஸ்கிரீனுக்கு பின்னால் நடந்ததாகவும், இதைத் தொடர்ந்து, நள்ளிரவு, 1.30 மணிவரை, போட்டி ரெப்ரி ஜவகல் ஸ்ரீநாத் முன்னிலையில் விசாரணை நடந்ததாகவும், ராபின் உத்தப்பா மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து, பிரச்சினை கைவிடப்பட்டதாகவும், அந்த சேனல் செய்தி வெளியிட்டது.
ஆனால், அதுபோன்ற எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்று, ஜவகல் ஸ்ரீநாத் மறுப்பு கூறியுள்ளார். இந்த செய்தி எப்படி வெளியானது என்றே தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். தனக்கு எந்த புகாரும் இதுவரை வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் கேப்டன் கம்பீர் மற்றும், பெங்களூரு வீரர் கோஹ்லி ஆகியோர் இடையே, கடந்த சீசன் ஐபிஎல் ஆட்டத்தின்போது மைதானத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கை கலப்பு உருவாகும் நிலை வந்தது. சக வீரர்கள் தடுத்து விலக்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
ipl
»
sports
»
sports.tamil
» பெங்களூர் வீரர் சட்டை காலரை பிடித்து உலுக்கினாரா கொல்கத்தா வீரர் உத்தப்பா? திடீர் சர்ச்சை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment