கோடம்பாக்கத்தில் சில கூட்டணிகளுக்கு மவுசு அதிகம். இன்றைய இளைஞர்களுக்கு யுவன் சங்கர் ராஜா - செல்வராகவன், ஜிவி பிரகாஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த பாடல்களை ரொம்பப் பிடிக்கும். யுவன் சங்கர் ராஜா - செல்வராகம் கூட்டணி ஆயிரத்தில் ஒருவன் படத்தின்போது உடைந்து, இப்போது மீண்டும் சேர்ந்திருக்கிறது.
ஆனால் பொல்லாதவன், ஆடுகளம் படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ஜிவி பிரகாஷ் - வெற்றிமாறன் ஜோடி, இப்போது பிரிந்துவிட்டது. விசாரணை படத்துக்குப் பிறகு வெற்றி மாறன் இயக்கும் புதிய படம் சூதாடி. இதில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தை தனுஷும் வெற்றி மாறனும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்துக்கு முதலில் ஜிவி பிரகாஷ்தான் இசை என அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது அதிலிருந்து ஜிவி பிரகாஷ் விலகிக் கொண்டார்.
இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷுடன் பணியாற்றுவது வசதியாக இல்லை என்று தனுஷ் வெளிப்படையாகக் கூறிவிட்டாராம். இதனால் ஜிவி வெளியேற, அவருக்குப் பதில் சந்தோஷ் நாராயணனை சிபாரிசு செய்துள்ளார் தனுஷ். இதை வெற்றி மாறனும் ஏற்றுக் கொண்டாராம். சூதாடி படத்துக்கு தான் இசையமைப்பதை ட்விட்டரில் உறுதி செய்துள்ளார் சந்தோஷ் நாராயணன். குக்கூ, ஜிகிர்தண்டா, மெட்ராஸ் படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன்.
0 comments:
Post a Comment