‘சும்மா பார்த்தாலே பணம் தர்றீயா?’ என்பதை போல பார்க்க பழகிய சினிமாவுலகத்தில், படமே நடித்து முடித்த பிறகும் சம்பளத்தை பற்றி அதிகம் பிரஷர் கொடுக்காமல் ஒரு ஹீரோ இருப்பதை என்னவென்று புகழ்வது? இத்தனைக்கும் அவர் டாப் டென் வரிசையில் முக்கியமான ஹீரோ. மார்க்கெட்டில் இரண்டு கோடி அல்லது அதற்கும் மேல் என்று சம்பளம் வாங்கும் அவருக்கு இந்த படத்தில் அவ்வளவு பெரிய சம்பளமும் இல்லை. ஏன்? சுற்றி வளைத்து சஸ்பென்ஸ் கொடுப்பானேன்? விஜய் சேதுபதிதான் அவர். சம்பளத்தை வெகுவாக குறைத்துக் கொண்ட படம் இடம் பொருள் ஏவல். ஏன் குறைத்துக் கொண்டார் தெரியுமா? தென்மேற்கு பருவக்காற்று மூலம் இவரை அறிமுகப்படுத்தியதே இடம் பொருள் ஏவல் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமிதானே!
திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை உலகம் முழுக்க வெளியிடப் போவது உதயநிதியின் ரெட் ஜயன்ட் மூவிஸ் நிறுவனம். இவ்வளவு ஜபர்தஸ்துகள் இருந்தும், விஜய் சேதுபதிக்கு சம்பளம் பெருமளவு செட்டில் செய்யப்படாமல் இருக்கிறதாம்.
அடுத்த மாதத்தில் படத்தை வெளியிடப் போகிறார்கள். இறுதி கட்டத்தில் இருக்கிறது வேலைகள். அதனால் கடந்த சில நாட்களாகவே விஜய் சேதுபதியை டப்பிங் பேசுவதற்காக அழைக்கிறார்களாம். ‘கண்டிப்பா வர்றேன். ஆனால் மனிதாபிமானத்தோட நடப்பதற்கு நீங்களும் முன் வரணும் இல்லையா? என் சம்பளத்தில் அட்லீஸ்ட் பத்து லட்சமாவது கொடுங்க. வர்றேன்’ என்கிறாராம் விஜய் சேதுபதி.
வேறொரு ஹீரோவா இருந்தா, முழுசா எண்ணி வைங்க. வர்றேன் என்பார். இவர் கேட்பதோ அவருக்கு தருவதாக சொன்ன சம்பளத்தில் பல மடங்கு குறைவுதான். இருந்தாலும் கொடுக்க முடியலையே நிலைமை கம்பெனிக்கு. பணம் வாங்கிக் கொண்டு பேசுவாரா? அல்லது வாங்காமலேயே பேசுவாரா? அதுதான் இன்டஸ்ட்ரியின் டார்ச்லைட் பார்வையாக இருக்கிறது.
0 comments:
Post a Comment