↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியையுடன் மாயமாகிய மாணவன் சென்னை கும்மிடிபூண்டியில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். மத்திய ரிசர்வ் போலீசில் வேலை பார்க்கும் இவரது மனைவி பெயர் மாரியம்மாள். இவர்களது 15 வயது மகன் சிவசுப்பிரமணியன் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு சென்ற சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கியபோது ஒரு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அப்போது, சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை அருகே காலாங்கரையை சேர்ந்த கோதை (23) என்பவருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
10ம் வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் கற்று கொடுத்து வந்துள்ளார். நாளடைவில் அவர்களுக்குள் காதல் (!) ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் இல்லாத நேரத்தில் வகுப்பறையில் இருவரும் நெருக்கமாக சீண்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால் பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 31ம் தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் கடையநல்லூர் காவல் நிலையத்திலும், கோதை தந்தை செங்கோட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர். இருவரது செல்போனுக்கும் போலீசார் தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. கடைசியாக செல்போன் டவர் கன்னியாகுமரியை காட்டியதால், அங்கு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதனிடையே மாணவன் கொண்டு சென்ற ஏடிஎம் கார்டில் பணம் எடுத்தால், அதை வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க போலீசார் திட்டமிட்டிருந்தன். அதேபோல, நேற்று அந்த ஏடிஎம் கார்டை மாணவன் பயன்படுத்தியுள்ளான். அதை டிரேஸ் செய்தபோது, சென்னை, கும்மிடிபூண்டி பகுதியில் ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்தது. எனவே கும்மிடிபூண்டி பகுதியில் போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் கோதை அல்லது சிவசுப்பிரமணியன் ஆகியோரின் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Home
»
news
»
news.india
» ஆசிரியையுடன் தலைமறைவான மாணவன் சென்னையில் பதுங்கலா? ஏடிஎம் கார்டால் துப்பு துலங்கியது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment