கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் சினிமாவில் மட்டுமின்றி விளம்பரத்திலும் கோடி கோடியாய் சம்பாதித்து வருவது அனைவரும் தெரிந்ததே. விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் ஒருசில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருந்து பெரும் வருவாயை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது விஷாலும் இணைந்துள்ளார்.
பூஜை, ஆம்பள ஆகிய தொடர் வெற்றி படங்களை கொடுத்த விஷாலுக்கு திரையுலகில் மட்டுமின்றி விளம்பர உலகிலும் தற்போது வாய்ப்பு வந்துள்ளது. பிரபல குளிர்பான நிறுவனமான தம்ஸ் அப்' நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக விஷால் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விஷால் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கூறும்போது, 'தம்ஸ் அப் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியதோடு தம்ஸ் அப் தயாரிக்கும் தொழிற்சாலையை சமீபத்தில் சுற்றி பார்த்ததாகவும், விரைவில் தம்ஸ் அப் நிறுவனத்திற்காக ஒரு விளம்பர படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் தம்ஸ் அப் நிறுவனத்தில் பிராண்ட் அம்பாசிடராக சல்மான்கான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment