இந்தியாவை பொறுத்தவரை எல்லா மொழி படங்களுக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கும், அது ஆங்கில படமாக இருந்தாலும் அதே வரவேற்ப்பு தான். சென்ற வாரம் கொம்பன், நண்பேண்டா, சகாப்தம் மற்றும் ஹாலிவுட் படமான பாஸ்ட் & பியுரியஸ் 7 படங்கள் வெளியானது.
இதில் கொம்பன், நண்பேண்டா படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது, ஆனால் இந்த இரண்டு படங்களை விட ஹாலிவுட் படமான பாஸ்ட் & பியுரியஸ் 7 வரவேற்ப்பு அதிக அளவில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் இந்த படத்தில் வேகத்துக்கு மட்டும் குறையே இருக்காது, ஆரம்பம் முதலே கார்களில் வித்தை காட்டுவார்கள், அதோடு இந்த படத்தில் ஒரு கதானாயகனான பால் வாக்கர் மரணம் மக்களை அதிர்ச்சிகுள்ளாகியது என்பதால் அவரது கடைசி படத்தை பார்க்க வேண்டும் எனவும் ரசிகர்கள் குவிந்தனர்.
இந்த படம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்தியாவில் சுமார் ரூ. 33 கோடி மேல் வசூல் செய்துள்ளதாம். விஜய், அஜித் படங்களை விட இப்படத்தின் வசூல் அதிகமாம், அதோடு விஜய், அஜித் படங்களுக்கு கிடைத்த தியேட்டரை விட இதற்கு குறைவு என்பது கவனிக்கத்தக்கது.
0 comments:
Post a Comment