தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அனைத்து தனியார் தொலைக்காட்சி உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றை சமீபத்தில் சங்க அலவலகத்தில் நடத்தியது.
ஒவ்வொரு தொலைக்காட்சியும் வருடத்திற்கு குறைந்தபட்சம் 15 படங்களாவது வாங்க வேண்டும் என சங்கம் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
தமிழ் சினிமாவை வைத்து பெரிய அளவில் சம்பாதித்து வரும் விஜய் தொலைக்காட்சி இக்கூட்டத்தைப் புறக்கணித்தது.
தங்களை ஒரு பொருட்டாக மதிக்காத விஜய் தொலைக்காட்சி விரைவில் நடத்தவிருக்கும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என தடை விதிக்கும் முடிவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் வந்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சிக்கு திரையுலகப் பிரபலங்கள் யாரும் பேட்டி கொடுக்கக் கூடாது எனவும் அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளதாம்.
0 comments:
Post a Comment