↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கமல்ஹாசனின் உத்தம வில்லன்' படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் சமீபத்தில் இந்து அமைப்பு ஒன்று காவல்துறையினர்களிடம் புகார் அளித்தது. இந்து அமைப்பின் இந்த குற்றச்சாட்டுக்கு முஸ்லீம் அமைப்பு ஒன்றும் ஆதரவு கொடுத்து என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகளுக்கு கமல்ஹாசன் ஏற்கனவே பதில் கூறிவிட்ட நிலையில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், கமல்ஹாசனின் உத்தம வில்லன்' படத்திற்கு முழு ஆதரவு தரவுள்ளதாகவும், சென்சார் செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தினை தடை செய்ய எந்த அமைப்பு முயன்றாலும் அதை எதிர்த்து நடிகர் சங்கம் குரல் கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் கார்த்தி நடித்த 'கொம்பன்' படத்திற்கு அரசியல் கட்சி ஒன்று பிரச்சனை செய்தபோதும் சரத்குமார் கொம்பன்  படத்தின் ரிலீஸுக்கு முழு ஆதரவு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top