இவ்வகையான போன்களில் பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் பிரச்சனை பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடுவது தான், இதனை தவிர்க்க சில விடயங்களை பின்பற்றினாலே போதும்.
ஸ்மார்ட்போனில் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுவதற்கு, இணையத்தை பயன்படுத்தி இலவச அப்ளிக்கேஷன்களை டவுன்லோடு செய்யும்போது அவற்றில் தோன்றும் விளம்பரங்களே அதிகமாக சார்ஜினை எடுத்து கொள்கின்றன.
எனவே, பேட்டரி விரைவில் தீராமல் இருக்க அதிக விளம்பரங்கள் இருக்கும் இலவச அப்ளிக்கேஷன்களை டவுன்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
சிலர் தாங்கள் வைத்திருக்கும் அனைத்து அப்ளிக்கேஷன்களையும் உபயோகம் இல்லாத வேலையிலும் 'ஆன்' செய்து வைத்திருப்பார்கள்.
இதனால் போனின் இயக்கம் தொடர்ந்து நடப்பதால் பேட்டரி வேகவேகமாக தீர்ந்துவிடும்.
எனவே, நீங்கள் கைப்பேசியை பயன்படுத்தாத சமயத்தில் அப்ளிக்கேஷன்களை அணைத்து வைத்திருக்க வேண்டும்.
உங்களது இருப்பிடத்தை பொருத்து கைப்பேசியின் சிக்னல் அளவு மாறும், குறைந்த அளவிலேயே சிக்னல் இருக்கும்போது கைப்பேசியில் அதிகளவு சார்ஜ் செலவாகும்.
மேலும், பயனில்லாத சமயங்களில் ஜி.பி.எஸ். சேவையை 'ஆப்' செய்து வைப்பதும் கைப்பேசியின் சார்ஜ் சீக்கிரம் காலியாவதை தடுக்கும்.
0 comments:
Post a Comment