ஐபிஎல் 8வது தொடரில் இன்று நடந்த 6வது லீக் ஆட்டத்தில் டெல்லி, ராஜஸ்தான் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணிக்கு மயாங்க் அகர்வால், ஸ்ரேயாஷ் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தது.
ஆரம்பத்திலே அதிரடியை தொடர்ந்த அகர்வால் 21 பந்துகளில் 37 ஓட்டங்கள் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தர்.
பொறுமையாக விளையாடி வந்த ஸ்ரேயாஷ் அதிரடி காட்டினார். அவர் 30 பந்துகளில் 40 ஓட்டங்கள் (3 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த அதிரடி வீரர் யுவராஜ் 2 சிக்சர் விளாசிய நிலையில் 17 பந்துகளுக்கு 27 ஓட்டங்கள் எடுத்து நடையை கட்டினார்.
பின்னர் களமிறங்கிய மேத்யூஸ் தன் பங்கிற்கு அதிரடி காட்டினார். இவர் 14 பந்துகளில் 27 ஓட்டங்கள் (3 பவுண்டரி, 1 சிக்சர்) குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவருடன் டுமினி 44 ஓட்டங்கள் (3 சிக்சர்) குவித்து களத்தில் இருந்தார்.
டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் (11) ஏமாற்றம் அளித்தார்.
தொடக்க வீரராக களமிறங்கிய ரஹானே பொறுமையான ஆட்டத்தை விளையாடினார். அடுத்து வந்த அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் (10), கருண் நாயர் (20) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
சிறப்பாக விளையாடி வந்த ரஹானே (47) இம்ரான் தாகிர் சுழலில் சிக்கி அரைசதத்தை தவறவிட்டார். பின்னர் வந்த ஸ்டூவர்ட் பின்னி 1 ஓட்டத்தில் நடையை கட்டினார்.
சொதப்பல் துடுப்பாட்டத்தால் ராஜஸ்தான் அணி நெருக்கடியில் சிக்கியது. இதனையடுத்து வந்த தீபக் ஹோடா அதிரடி ஆட்டத்தை காட்டினார். அவர் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார்.
25 பந்துகளில் 54 ஓட்டங்கள் (3 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்து அணிக்கு நல்ல நிலைமையை உருவாக்கினார்.
அடுத்து பல்க்னர் (17) ஆட்டமிழக்க, மோரிஸ் (13), சவுத்தி (7) அணியை வெற்றி பெறச் செய்தனர். இதனால் பரபரப்பான கட்டத்தில் ராஜஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
0 comments:
Post a Comment