↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஐபிஎல் கிரிக்கெட்டில் வர்ணனை செய்யும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை தரக்குறைவாக வர்ணனை செய்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, பிறகு அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர், சோனி சிக்ஸ், மேக்ஸ் ஆகிய சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யபடுகிறது. இதில், சோனி மேக்ஸ் சேனல் இந்தியில் கமெண்டரி கொடுக்கிறது.
இந்திய முன்னாள் வீரர் சித்து, பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ரமீஸ் ராஜா, சோயிப் அக்தர் ஆகியோர் இந்தி கமெண்டரி செய்து வருகின்றனர். அதில், சித்து வித்தியாசமாக கமெண்டரி அடிக்கிறேன் என்கிற பெயரில், ஆதி முதல் அந்தம் வரை தோண்டியெடுத்து காமெடி செய்வார். நான் ஸ்டாப்பாக நம்மூரு டிடி மாதிரி தொகுத்து வழங்குவார்.
சோயிப் மற்றும், ரமீஸ் கிரிக்கெட் ஷாட்டுகளின் குறைபாடுகள், பந்து வீச்சின் குறை, நிறைகளை கூறுவது வழக்கம். இந்நிலையில் இந்திய மாஜி கிரிக்கெட் வீரர், வினோத் காம்ப்ளி தனது அதிகாரப் பூர்வ டிவிட்டர் அக்கவுண்டில், நேற்றிரவு இம்மூவரையும் வருத்துவிட்டார்.
சித்து நான்சென்ஸ் மாதிரி பேசாமல், வாயை மூடிக்கொண்டு போ..என்றும், பாகிஸ்தான் கிரிக்கெட்காரர்கள், நம்ம ஊரு பிளேயர்களை குறை சொல்லி அதற்கும் காசு வாங்கி செல்கிறார்கள் என்றும் சகட்டு மேனிக்கு உளறித்தள்ளிவிட்டார். இதனிடையே, டிவிட்டர் பயனாளிகள் பலரும் இதை பார்த்துவிட்டு, காம்ப்ளி கருத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். அவர்களுடன் கருத்து மோதலிலும் ஈடுபட்டார் காம்ப்ளி. தைரியமிருந்தால், நேரில் வா..என்கிற ரீதியில் எல்லாம் ரசிகர்களை திட்டி தீர்த்தார்.
இந்நிலையில், காலையில் பொழுது புலர்ந்து எல்லாம், 'தெளிவானதும்' ஐயய்யோ..அந்த டிவிட்டை நான் போடவில்லை. எனது நண்பன் எனது போனை வைத்து டிவிட் செய்துவிட்டான் என்று மறுப்பு டிவிட் போட்டுள்ளார் காம்ப்ளி. மேலும், மோசமான டிவிட்டுகளை டெலிட்டும் செய்துவிட்டார். மன்னிப்பும் கேட்டுள்ளார். இருப்பினும் ஸ்கிரீன் ஷாட்டுகள் ரசிகர்களிடம் அப்படியே உள்ளன. என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா..
Home
»
sports
»
sports.tamil
» நம்ம கிட்ட காசு வாங்கிட்டு நம்மளையே குறை சொல்றதா.. பாக். வர்ணனையாளர்கள் பற்றி காம்ப்ளி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment