எதையும் வெட்டிப் பேச்சு என்று ஒதுக்கினால் எல்லாம் போச்சு- முதலில் மெல்ல ஆரம்பிக்கிற முணுமுணுப்பு நாளடைவில் பெரும் கலவரத்தில் கொண்டு போய் விட்டுவிடும். இப்போது கிளம்பியிருப்பது வெறும் முணுமுணுப்புதான். ஆனால் லென்ஸ் வைத்து பார்க்காவிட்டாலும், முணுமுணுப்பின் பின்னாலிருக்கிற உண்மை, விஷாலுக்கும் விஜய்க்கும் நிஜமாகவே வரப்பு தகராறு ஸ்டார்ட் ஆகிருச்சோ என்றே எண்ண வைக்கிறது.
கத்தி வெளிவந்த அதே நாளில் பூஜையும் வெளிவந்ததல்லவா? அப்பவே இந்த முணுமுணுப்பு லேசாக ஆரம்பித்தது. அதற்கப்புறம் நடந்ததெல்லாம் தானாக நடந்தது என்று கொள்ள முடியாது. எப்படி?
சமீபத்தில் தனது ரசிகர் மன்ற தலைவரை மாற்றிவிட்டு புதிதாக ஜெயசீலன் என்பவரை நியமித்திருக்கிறார் விஷால். இந்த ஜெயசீலன் ஒரு காலத்தில் விஜய்யின் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர். விஜய்யிடம் இருக்கிற நாளில் இருந்தே சந்து வழியாக விஷாலிடமும் தொடர்பு வைத்திருந்தாராம் அவர். மனசுக்கு ஒப்பாத சில காரியங்களால் அங்கிருந்து வெளியேறிய ஜெயசீலன் நேரடியாக வந்து சேர்ந்த இடம்தான் விஷாலின் ரசிகர் மன்றம்.
நீங்க எங்க வேணும்னாலும் சேருங்க. இங்க வராதீங்க என்று விஷால் அவரிடம் சொல்லியிருக்கலாம். ஏனென்றால், தெலுங்கு மார்க்கெட்டில் ஏற்கனவே விஜய்க்கும் விஷாலுக்கும் இழுபறி சண்டை இருந்து வருகிறது. வரப்போகும் தனது புதிய படத்திற்கு அவர் புலி என்று பெயர் வைத்தால், இவர் பாயும் புலி என்று வைக்கிறார். இந்த நேரத்தில் ஜெயசீலனின் வருகையும், அவருக்கு தரப்பட்டிருக்கும் பொறுப்பும் என்னென்னவோ எண்ண வைக்கிறது.
விளக்கம் சொல்ல வேண்டிய இடத்திலிருக்கிறார் விஷால். சொல்வாரா?
0 comments:
Post a Comment