↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சென்னை சேலையூரில் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது உறவினரே குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. 
இதனையடுத்து அவரது உறவினரை பொலிசார் கைது செய்துள்ளனர். கொலையாளியிடம் இருந்து நகை மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை இளம்பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு மழைநீர் கால்வாயில் பிணமாக கிடந்தார்.

சேலையூர் பொலிசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிங்காரம் மகள் ஜெரினாமரியா (வயது 27) என்பது தெரியவந்தது.
இவர் சாந்தோமில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியில் சென்ற அவர், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்த கொலை தொடர்பாக சென்னை மாநகர பொலிஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் தனிப்படை பொலிசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் ஜெரினா மரியாவை அவரது நெருங்கிய உறவினர் வேளச்சேரியைச் சேர்ந்த கென்னரி ராபர்ட் (35) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து கென்னரி ராபர்ட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது பல பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

கென்னரி ராபர்ட் என்ற கிம், சொந்தமாக தொழில் செய்து வந்தார். இவருக்கு பேஸ் புக் மூலம் பள்ளி ஆசிரியை ஜெரினா மரியா பழக்கமானார். அதன்பின்னர் இருவரும் உறவினர்கள் என தெரியவந்ததால் நெருங்கி பழகினர்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்ய பணம் வேண்டும் என ஜெரினா மரியாவிடம் அடிக்கடி பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இவ்வாறு மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கென்னரி ராபர்ட் வாங்கியுள்ளார்.

பணத்தை திருப்பி கேட்டபோது கென்னரி ராபர்ட் ஜெரினா மரியாவை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பணம் தருவதாக கூறிய கென்னரி ராபர்ட், வேளச்சேரியில் உள்ள தன்னுடைய சகோதரிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த ஜெரினா மரியாவிற்கு மதுபானத்தை குளிர்பானத்தில் கலந்து கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுடிதார் துப்பட்டாவால் அவரது கைகளை கட்டிய கென்னரி ராபர்ட் நாடாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் அணிந்திருந்த சுமார் 10 பவுன் மதிப்புள்ள தங்கச்சங்கிலி, கம்மல் வளையல்களை எடுத்துக்கொண்டு பிணத்தை அங்கேயே போட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
மீண்டும் நள்ளிரவில் அங்கு வந்த கென்னரி ராபர்ட் ஜெரினா மரியாவின் உடலை அப்புறப்படுத்த திட்டமிட்டார்.

அதிகாலை ஜெரினாமரியா உடலுடன் காரில் வேளச்சேரியில் இருந்து மாடம்பாக்கம் வந்த கென்னரி ராபர்ட், பிணத்தை மெயின் ரோட்டில் உள்ள மழைநீர் கால்வாயில் போட்டு விட்டு தப்பி சென்று விட்டார்.

கென்னரி ராபர்ட் மீது சந்தேகம் இருப்பதாக ஜெரினாமரியாவின் சகோதரர் தெரிவித்ததால் பொலிசார் அவரை பிடித்து விசாரித்ததில் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் கைது செய்யப்பட்ட கென்னரி ராபர்ட்டை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர் செய்து அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top