அதனால் இதுவரை பெங்களூருவில் தங்கியிருந்தபடியே கேரளா சென்று நடித்து வந்த மீனா இப்போது கேரளாவில் வீடு பிடித்து குடியேறி விட்டார். அதேசமயம், படங்கள் ஹிட்டாகி வருவதால் வெற்றிக்களிப்பில் இருந்து வந்த மீனாவின் உடல் எடை தற்போது கணிசமான அளவு பெருத்து விட்டதாம். இளவட்ட அம்மாவாக காட்சி அளித்த அவர் இப்போது நடுத்தர வயது அம்மா போன்று முத்தின கட்டையாகி விட்டார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மலையாள டைரக்டர்கள், மீனாவிடம் உடம்பை குறைக்குமாறு அட்வைஸ் செய்துள்ளனர்.
அதனால், திருமணத்திற்கு பிறகு உடல் எடையை பராமரிப்பதில் பெரிய அளவில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்த மீனா, இப்போது சினிமாவில் கதாநாயகியான ஆரம்ப காலத்தில் இருந்தது போன்று கடும் உடற்பயிற்சி, டயட்ஸ் என்று இறங்கியிருக்கிறார். அதனால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வரை அவர் ஜிம்மில்தான் இருக்கிறாராம்.
0 comments:
Post a Comment