தமிழ் இலக்கிய உலகில் முதன்மையானவர் ஜெயகாந்தன். சிறுகதைகள், புதினங்கள், திரைப்படங்கள் என பன்முக ஆளுமை கொண்டவர்.
1934ஆம் ஆண்டு கடலூரில் பிறந்தவர். பின்னர் இளம் வயதில் சென்னைக்கு குடியேறிய அவர் தீவிர இடதுசாரியாக செயல்பட்டார்.
பல்வேறு பத்திரிகைகளில் ஜெயகாந்தன் படைப்புகள் வெளியாகி பெரும் அங்கீகாரத்தை தேடித் தந்தன. உன்னைப் போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற ஜெயகாந்தனின் நாவல்கள் திரைப்படங்களாகின. உயரிய இலக்கிய விருதான 'ஞானபீட' விருது பெற்றவர் ஜெயகாந்தன்.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, ஜெயகாந்தன் உடல் நலக் குறைவால் நேற்றிரவு 9 மணிக்கு காலமானார்.
0 comments:
Post a Comment