↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
போராட்டம் நடத்திய நடிகை ரோஜா சமரசம் பேச வந்த அதிகாரிகளிடம் "நாங்க ஒன்னும் எஸ்.சி.எஸ்.டி. இல்லை.. பக்கத்துல வந்து பேசுங்க" என்று திமிராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சாதிய குறிப்பிட்டு இழிவாக பேசியதாக ரோஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா புத்தூர் பகுதியில் பொது மக்களிடம் குறைகேட்டார். தொகுதி மக்கள் சிலருக்கு முதியோர் உதவித் தொகை கிடைக்கவில்லை.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்க அவர் புத்தூர் மண்டல பிரிவு அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அவரை பார்க்க அதிகாரிகள் வரவில்லை.
இதனால் மண்டல அலுவலகம் முன்பு நடிகை ரோஜா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் சுமார் 500 பேருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது தெலுங்கு தேச தொண்டர்கள் அங்கு வந்து எதிர் போராட்டம் நடத்தினார்கள். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சாய்நாத் தான் தெலுங்கு தேச தொண்டர்களை வரவழைத்ததாக ரோஜா குற்றம் சாட்டினார்.
நீண்டநேரம் போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் வராததால் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் "நாங்கள் ஒன்றும் எஸ்.சி, எஸ்.டி. அல்ல... எங்கள் பக்கத்தில் வந்து பேசுங்கள்'' என்று ரோஜா கூறினார். இதையடுத்து சாதியை இழிவுபடுத்தி பேசியதாக நடிகை ரோஜா மீது தெலுங்கு தேசம் கட்சியினர் புத்தூர் போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரையடுத்து ரோஜா மீது போலீசார் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Home
»
news
»
news.india
»
roja
» "நாங்க ஒன்னும் அது இல்லை.. பக்கத்துல வந்து பேசுங்க": நடிகை ரோஜா திமிர் பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment