கமல் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு வந்த பிரச்சனைகளை நாம் நன்றாக அறிவோம். இப்போது கமல் நடித்து வரும் உத்தம வில்லன் படத்துக்கும் பிரச்சனை எழும்பியுள்ளது.
உத்தம வில்லன் படத்தில் வைஷ்ணவர்களை புண்படுத்தும்படியான பாடல் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கு குறித்து கமல் கூறுகையில், உத்தமவில்லனின் யார் மனதையும் புண்படுத்தும்படியான காட்சிகள் இடம்பெறவில்லை என்பதை அடித்து சொல்வேன்.
விஸ்வரூபம் பட நேரத்தில் நேர்ந்த சில இன்னல்களால் சில காட்சிகளை நீக்க சம்மதித்தேன். ஆனால் இந்த முறை உத்தம வில்லனில் எந்த காட்சிகளையும் நீக்க சம்மதிக்க மாட்டேன் என்று கமல் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment