கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 5வது ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணி மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான அணித்தலைவர் ராபின் உத்தப்பா 35 ஓட்டங்களும், கவுதம் கம்பீர் அரைசதம் கடந்து 58 எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே 23 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ் 11 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் எடுத்தது. ஆண்ட்ரி ரசல் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனையடுத்து 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 19 ஓவரிலேயே 7 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோஹ்லி 13 ஓட்டங்களும், டிவில்லியர்ஸ் 28 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
கெய்ல் மட்டுமே ஒற்றை ஆளாக நின்று 7 பவுண்டரி, 7 சிக்சருடன் அரைசதம் கடந்து 96 ஓட்டங்கள் குவித்து வெற்றி வழி வகுத்தார். ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார்.
0 comments:
Post a Comment