உலகக்கிண்ணத் தொடர் முடிவடைந்ததையடுத்து அனைத்து நாட்டு வீரர்களும் ஒன்றாக விளையாடும் ஐ.பி.எல் தொடர் இன்று இந்தியாவில் ஆரம்பமானது.
8வது ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மாவும், ஆரோன் பின்ச்சும் களமிறங்கினர்.
பின்ச் 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆதித்யா டேர் 7 ஓட்டங்களும், அம்பதி ராயுடும் ஓட்டங்களின்றியும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து நிலைத்து நின்று ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ரோகித் ஷர்மா அரைசதம் கடந்து 98 ஓட்டங்களும், ஆண்டர்சன் 55 ஓட்டங்களும் எடுத்தனர்.
மும்பை அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. பந்துவீச்சில் கொல்கத்தா சார்பில் மோர்னே மார்கல் 2 விக்கெட்டும், ஷகிப் அல்ஹசன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 169 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த வருட ஐ.பி.எல் தொடரின் வெற்றிக்கணக்கை நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி தொடங்கியது.
கம்பீர் அரைசதம் கடந்து 57 ஓட்டங்களும், மனிஷ் பாண்டே 40 ஓட்டங்களும், ஆட்டமிழக்காமல் சூர்யகுமார் யாதவ் 46 ஓட்டங்களும் எடுத்தனர்.
0 comments:
Post a Comment