↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், முக்கியமான வீரர்களில் சிலர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட அந்த வீரர்களில் ஐந்து பேரை மட்டும் ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு வரலாம். மேலும் சிலரும் சொதப்பியிருக்கிறார்கள் என்றாலும், அதிகபட்ச எதிர்பார்ப்பு அடிப்படையில், இந்த ஐந்து பேர் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
டெல்லி அணியால் ரூ.16 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் யுவராஜ் சிங். 2 போட்டிகளில் இதுவரை ஆடிய யுவராஜ்சிங், மொத்தம் எடுத்த ரன்கள் 36 மட்டுமே. இனியாவது, ஆட்டம் சூடு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான், பார்க்க வேண்டும்.
மும்பை அணிக்காக ஆடிவந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை, ரூ.10.5 கோடி என்ற பெரும் விலை கொடுத்து வாங்கியது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். அவர் இதுவரை 2 போட்டிகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
சென்னை அணியின் சூப்பர் ஸ்டார் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடர் அனைத்திலும் சிறப்பாக ஆடி, அதிக ரன் குவிப்பில் முதலிடத்தில் இருப்பவர். அதிக சிக்சர் விளாசிய வீரர்களில் 2வதாக உள்ளார். ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் சோபிக்கவில்லை. 2 போட்டிகளிலும், சேர்த்து 18 ரன்கள்தான் எடுத்துள்ளார். ஆனால், அவரது டச் சிறப்பாகவே உள்ளதால், அடுத்தடுத்த போட்டிகளில் அணி வெற்றிக்கு உதவுவார் என்று நம்பலாம்.
சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா எப்போதுமே, இந்தியாவுக்காக ஆடுவதைவிட, சிஎஸ்கேயில்தான் சிறப்பாக ஆடுவார். ஆனால், இம்முறையோ, அவரும் இரு போட்டிகளில் சேர்த்து வெறும் 17 ரன்கள்தான் எடுத்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர், இஷாந்த் ஷர்மா காயம் காரணமாக உலக கோப்பையில் ஆடவில்லை. ஆனால், சன் ரைசர்ஸ் அணிக்காக அவர் களமிறங்கிய முதல் போட்டியில் சென்னைக்கு எதிராக 3 ஓவர்களில் 46 ரன்களை அள்ளிக் கொடுத்தார் இஷாந்த் ஷர்மா. இதனால், பெங்களூருக்கு எதிரான போட்டியில் அணியில் இடம் கிடைக்கவில்லை.
Home
»
ipl
»
sports
»
sports.tamil
» ஐபிஎல் 8: எதிர்பார்ப்பை எகிற வைத்து, ஏமாற்றிய 5 நட்சத்திரங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment