இலங்கையின் பிரீமியர் லீக் ஆட்டத்தில் Sri Lanka Air Force Sports Club மற்றும் Galle Cricket Club அணிகள் மோதின.
முதல் இன்னிங்ஸில் விளையாடிய காலி அணி 15.1 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அனைத்து வீரர்களும் ஒற்றை ஓட்டங்களில் வெளியேறினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை விமான அணி 215 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் 184 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கியது காலி அணி.
முதல் இன்னிங்ஸில் கோட்டை விட்ட அந்த அணி 2வது இன்னிங்ஸில் அசத்தலாக விளையாடி 295 ஓட்டங்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து 112 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய விமான அணி 107 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் காலி அணி 4 ஓட்டங்களினால் திரில் வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸில் 31 ஓட்டங்களில் சுருண்டாலும் 4 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற காலி அணிக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment