இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய முனி, முனி 2 காஞ்சனா ஆகிய வெற்றி படங்களை அடுத்து அதன் தொடர்ச்சியாக அவர் இயக்கியுள்ள அடுத்த படம் காஞ்சனா 2". இந்த படத்தின் இசை சமீபத்தில் வெளியாகி 'சண்டிமுனி' உள்பட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. இந்நிலையில் இந்த படம் வரும் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் சன் பிக்சர்ஸ் வெளியிடவுள்ள இந்த படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை இராம.நாராயணன் அவர்களின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் ஏற்கனவே இந்த படத்திற்காக 350 தியேட்டர்கள் புக் ஆகியுள்ள நிலையில் ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் மேலும் சில தியேட்டர்கள் புக் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாரம் 'காஞ்சனா 2' படம் சென்சார் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகவா லாரன்ஸ், டாப்சி, நித்யா மேனன், கோவை சரளா,ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு லியோன் ஜேமஸ், சத்யா, தமன், ஐஸ்வமித்ரா ஆகிய நான்கு இசையமைப்பாளர்கள் பாடல்களை கம்போஸ் செய்துள்ளனர். இந்த திரைப்படம் பிரான்ஸ் நாட்டில் ஏழு திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
0 comments:
Post a Comment