↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழ்பட தயாரிப்பாளர்கள் தங்களது புது படங்களுக்கான தலைப்புகளை தயாரிப்பாளர் சங்கத்திலும் சினிமா, டெலிவிஷன் தயாரிப்பாளர் சங்க கில்டிலும் பதிவு செய்கின்றனர்.
sensor certificate for Tamil film
இங்கு பதிவு செய்யப்படும் படங்களை தணிக்கை குழுவினரும் பார்த்து சான்றிதழ் அளித்து வந்தனர்.
ஆனால் தற்போது திடீரென சினிமா டெலிவிஷன் தயாரிப்பாளர் சங்க கில்டில் பதிவு செய்யப்பட்ட படங்களுக்கு தணிக்கை சான்று அளிக்க தணிக்கை குழு மறுத்துவிட்டது. இதனால் 40 படங்களின் தயாரிப்பாளர்கள் தணிக்கை சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பில் உள்ளனர்.
தயாரிப்பாளர் சங்க கில்டில் இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் மோதல் காரணமாகவே தணிக்கை நிறுத்தப்பட்டு உள்ளதாக தணிக்கை குழு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தயாரிப்பாளர் சங்க கில்டில் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்று உள்ளனர். இவர்கள் ஏற்கனவே பொறுப்புகளில் இருந்த கிரிதிலால் நாக்பால் உள்ளிட்ட பலரை நீக்கிவிட்டனர். இதனை எதிர்த்து அவர்கள் கோர்ட்டுக்கு சென்று இருக்கிறார்கள். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது. இதை காரணம் காட்டியே 40 படங்களுக்கும் தணிக்கை சான்று மறுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தணிக்கை குழு அதிகாரி பக்கிரிசாமி கூறும்போது, ஒரு சங்கத்தில் இரு கோஷ்டிகள் உரிமை கொண்டாடுகின்றனர்.
இந்த சர்ச்சையால் தான் தணிக்கை சான்று அறிவிப்பதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம். கோஷ்டி பிரச்சினை கோர்ட்டில் இருப்பதால் இறுதி தீர்ப்புக்காக காத்து இருக்கிறோம் என்றார்.
தணிக்கை குழு சான்று அளிக்க மறுப்பதை எதிர்த்து கில்டு செயலாளர் டி.ஆதிராம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் சங்க நிர்வாகிகளுக்குள் பிரச்சினை இருப்பதை காரணம் காட்டி படங்களை தணிக்கை செய்வதற்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது. அதற்கு தணிக்கை குழு அதிகாரிக்கு உரிமை இல்லை.
அவரது ஒருதலைபட்சமான நடவடிக்கையால் சுமார் 40–க்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கை சான்று பெற முடியாமல் முடங்கி கிடக்கின்றன. எனவே உடனடியாக கில்டு உறுப்பினர்கள் படங்களை தணிக்கை செய்வதற்கு மண்டல தணிக்கை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆதிராம் சார்பில் மூத்த வக்கீல் மோகன் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை ஜனவரி 6–ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
Home
»
»Unlabelled
» தமிழ்பட தயாரிப்பாளர்கள் சென்சார் குழுவை எதிர்த்து வழக்கு !
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment